“கெகனு லமயி (பெண் பிள்ளைகள்) “ - பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழா

“கெகனு லமயி (பெண் பிள்ளைகள்) “ - பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழா
  • :

 

இந்த வருடத்தின் 87 ஆவது பிரான்ஸின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்காக இலங்கையின் "கெகனு லமய் " திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேමෙசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுகத் மகதிவில்வெவ தெரிவித்தார்.

இன்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வெளியிட்டார்.

1978 ஆம் ஆண்டு , சுமித்ரா பீரிஸ் இயக்கிய இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் திரைப்படமானது என்றும் மீளமைக்கப்பட்ட இந்தப் படத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

பிரான்ஸ் தூதுவராலயம், லெஸ்டர் - சுமித்ர மன்றம் இந்தியாவி ன் திரைப்படம், பாரம்பரிய நிறுவனம் ஆகியவை இத்திரைப்படத்தின் மறுசீரமைப்பிற்காகப் பங்களிப்புகளை வழங்கியுள்ளன.

இவ்வாறு இந்த திரைப்படத்துக்கு மேலதிகமாக மேலும் ஐந்து திரைப்படங்கள் மீளமைக்கப்படுவதற்காக நடவடிக்கை எடுப்பதாகவும் திரைப்பட கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கட்டடத்தில் திரைப்படக் பாதுகாப்பகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]