பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பாக அரசாங்கத்தின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்ததாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயகவினால் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது குறித்து தனிப்பட்ட உறுப்பினர் யோசனையை முன்வைக்கும் போது நேற்று (07) பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனை வெளியிட்டார்.
இதன் போது தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்;
"பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் குறைக்கப்படுவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது போன்றவை தொடர்பாக நாம் 2001 ஆம் ஆண்டில் இருந்தே கதைத்துள்ளோம். நான் சந்தோஷப்படுகின்றேன் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இன்று அந்த யோசனையை பாராளுமன்றத்திற்கு முன்வைத்தமைக்காக. பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் இந்த யோசனைக்கு இணக்கம் தெரிவிக்கின்றோம். ஆனால் நாம் ஆதங்கப்படுகின்றோம்.
சகலரும் இணங்க வேண்டிய யோசனைக்காவது எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பாரம்பரியத்தை மாற்றுவதற்கு இணக்கம் இல்லை என்பது குறித்து. எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக முன்வைத்த யோசனைக்கு ஆதரவாக மேலும் அவர்கள் இந்த வரப்பிரசாதங்கள் குறைக்கப்படுவதற்கு கதைக்காது வேறு தலைப்புத் தொடர்பாக இன்னும் அந்த உறுப்பினர்கள் கதைக்கின்றார்கள் " என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.