தபால் துறையை நவீன மயப்படுத்தி இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று (06) பாராளுமன்றத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நுவரெலியா, கொழும்பு, காலி, கண்டி ஆகிய தபாலகங்கள் சுற்றுலா கவர்ச்சியை ஊக்குவிக்க கூடிய ஸ்தானங்களாக உருவாக்குவதாகவும் மேலும் புதிய 14 தபால் நிலையங்களை அமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்; இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தபால் துறைக்காக 23.9 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தின் போக்குவரத்தை நவீன மயப்படுத்த வேண்டும் அது அத்தியாவசியமானது. தபாலை நவீன மயப்படுத்தி, இலாபம் ஈட்டும் நிறுவனமாக உருவாக்குவதுடன் சுற்றுலாவை ஊக்குவிக்கும் தபால் அலுவலகங்களை முன்னேற்றவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.