இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (04) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் நாளை இடம்பெறவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.