'வெற்றிகரமான நபர் என்பது ஒரு சிறந்த தொழிலை செய்பவர் மட்டுமல்ல, சமூகத்தில் இரக்க குனத்துடன் வாழ்வதற்கான புரிதல் உள்ளவர்' - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

'வெற்றிகரமான நபர் என்பது ஒரு சிறந்த தொழிலை செய்பவர் மட்டுமல்ல, சமூகத்தில் இரக்க குனத்துடன் வாழ்வதற்கான புரிதல் உள்ளவர்' - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
  • :

ஒரு வெற்றிகரமான குடிமகன் என்பவர், ஒரு சிறந்த தொழிலை செய்பவர் மட்டுமல்ல, மற்றவர்களின் சிரமங்கள் மற்றும் பெண்களின் பிரச்சினைகளை உணரும் ஒரு குடிமகனாக சமூகத்தில் வாழ்வதற்கான புரிதல் உள்ளவர் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யௌவன பருவத்தினரின் சுகாதாரம் குறித்து பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டுவதற்காக நேற்று (17)கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

சுகாதாரம் கல்வியுடன் நேரடியாக தொடர்புடையது என்று நாங்கள் நம்புகிறோம். கல்விக்கும் சுகாதாரத்திற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம்.

சுகாதாரம் என்பது அனைவருக்கும் உள்ள உரிமையாகும், மேலும் சரியான சுகாதார வசதிகள் இல்லாததால், குறிப்பாக வசதிகள் குறைவாக உள்ள பாடசாலைகளில் உள்ள பெண் பிள்ளைகள் மாதத்திற்கு ஒரு முறையாவது கல்வி கற்க முடியாமல் தவிப்பதாக தரவுகள் காட்டுகின்றன.

அதே நேரத்தில், சரியான சுகாதார வசதிகள் இல்லாததால். அவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடும்; உரிமையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Related Articles