தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்க 'Clean Sri lanka' உடன் இணைந்து தொழிலாளர் நடவடிக்கை

  • :

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழிற்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்க 'Clean Sri lanka' திட்டத்தின் கீழ் 'தொழிலாளர் நடவடிக்கை' ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத் திட்டம், முப்படைகளின் பூரண ஆதரவுடன், ஜூலை மாதம் 04 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் 311 தொழிற்கல்வி மையங்களையும் உள்ளடக்கி ஆரம்பிக்கப்படும்.

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

Related Articles