கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர்  கடமைகளைப் பொறுப்பேற்றார்.
  • :

இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிறந்த பௌதிகவியலாளரும் கல்வி மேலாண்மைத் தலைவருமான பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளை நேற்று (17) பொறுப்பேற்றார்

.

தனது முதுமாணிப்பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் சிறப்பு இளமாணிப்பட்டத்தினையும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவர் தனது அறிவியல் பங்களிப்புக்களுக்காக உலகளவில் பெயர்பெற்றவர் மற்றும் 2018ம் ஆண்டிலிருந்து பௌதிகவியலில் சிறப்பு பேராசிரியராக விளங்குகின்றார்.

பேராசிரியர் பா.பிரதீபன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டுமுறை பதில் உப வேந்தராகவும், விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் மற்றும் பௌதிகவில் துறையின் தலைவராக இரு தொடர்காலங்களில் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழகத்தின் கல்விக்கொள்கைகளை வடிவமைப்பதற்கும், ஆராய்ச்சித் தரத்தை உயர்த்துவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் இவர் பாடத்திட்ட மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வெளியீடு, பல்கலைக்கழக விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய குழுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் இவர் ஆசிரியர்களை பயிற்றுவித்தல், பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்தல், தேர்வு நிர்வாகம் மற்றும் விஞ்ஞான கொள்கை விருத்தி போன்ற பல்துறைப் பணிகளில் தேசிய கல்வித்துறைக்கு பங்களிப்பினை வழங்குகின்றார்.

இலங்கையின் தனது ஆய்வுப் புலமைப்பரிசிலை இங்கிலாந்தின் காமென்வெல்த் முனைவர் புலமைப்பரிசில்களைப் பெற்று தனது கலாநிதிப் பட்டத்தை தென்னாபிரிக்காவின் ஜோகன்னஜ்பர்க் பல்கலைக்கழக்தில் பெற்றுக் கொண்டார்.

Related Articles