ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் பிரதேச செயலகங்கள் ஊடாக ஆன்லைன் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான கலந்துரையாடல் அராசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18.06.2025) நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கிளிநெச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.
இத் திட்டம் மும்மொழி மூலம் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கில் இத் திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.
வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாக சேவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


