இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 ஏப்ரல் 1 ஆம் திகதி கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற இராணுவ வர்ண இரவு – 2025 இல் கலந்து கொண்டார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, இராணுவ பதவி நிலை பிரதானியும் இராணுவ விளையாட்டுத் தலைவருமான மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இராணுவ கீதம் இசைத்தலுடன் விழா ஆரம்பமாகியதை தொடர்ந்து வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
நிகழ்வின் போது, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகியோரும் தகுதியானவர்களுக்கு வர்ண சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். பின்னர், இராணுவத் தளபதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக வர்ண சின்னங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந் நிகழ்வில், 26 விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த 120 விளையாட்டு வீரர்கள் சர்வதேச, தேசிய மற்றும் இராணுவ மட்டங்களில் சிறந்த சாதனைகளைப் படைத்ததற்காக வர்ணங்களால் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில், இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவர் இராணுவத் தளபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவுப் பரிசை வழங்கினார்.
விளையாட்டு பணிப்பக பணிப்பாளரின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்ட ஒரு நினைவுமிக்க மற்றும் கண்ணியமான மாலைப் பொழுதின் முடிவை இந் நிகழ்வு குறிக்கிறது.