நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் இல்லை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று (01) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக காட்டுவதற்காக சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.