அனுராதபுர போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (11) அனுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் எதிர்கொண்ட சம்பவம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.