All Stories

, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து கல்விக்கான நிதியுதவி

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்திடமிருந்து கல்விக்கான நிதியுதவி

சுற்றுலாப் பயணிகளுக்காக சீகிரியாவில் பொது சுகாதார வசதிகள்

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் பொது சுகாதார வசதிகளை மேம்படுத்த ரூ.350 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாத்தளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிலந்த பரணகம தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக சீகிரியாவில் பொது சுகாதார வசதிகள்

போக்குவரத்து, சுற்றாடல், வர்த்தகம் மற்றும் மனித நேய எண்ணக்கருக்களின் ஊடாக போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் மூன்று உப குழுக்கள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் 2025 சனவரி மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மூன்று உப குழுக்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுத்தார்.

முறைசாரா போக்குவரத்துத் துறை சார்ந்த பணியாளர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முதலாவது குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், இது, போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்படாத ஊழியர்களை தொழில்சார் அடிப்படையில் ஏற்று அங்கீகரிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது. தனியார் பேருந்துச் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், மின்னணு செயலிப் பயன்பாட்டின் வாயிலாக போக்குவரத்துத் துறையில் ஈடுபடுபவர்கள் (App Base Workers), இவர்களுக்காக ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றிற்கு பங்களிப்பு செய்தல் போன்ற விடயங்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்படும்.

இந்த உபகுழுவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான, சந்தன சூரியஆரச்சி (தவிசாளர்), ஜகத் விதான, தினிந்து சமன், தேவானந்த சுரவீர ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இரண்டாவது உப குழு, போக்குவரத்துத் துறை தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் போக்குவரத்துத் துறை சரியான தடத்தில் பயணிக்க வழிநடாத்துவதற்கான குழுவாக அமைந்துள்ளது. போக்குவரத்துத் துறை தொடர்பான சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல், எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் போக்குவரத்துத் துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல், போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தும் போது பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துதல் மற்றும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்கான சட்ட மற்றும் நிருவாக முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் என்பன இந்தக் குழுவின் நோக்கங்களாகும்.


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமசந்திர அவர்களைத் தவிசாளராகக் கொண்ட இந்த உபகுழுவில், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த த சில்வா, தனுர திசாநாயக, சுஜீவ திசாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய இதர சேவைகளை உருவாக்குவதற்கான வணிக மாதிரிகளை (Business Models ) உருவாக்குவதை நோக்காகக் கொண்டு மூன்றாவது உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்துத் துறையின் அடிப்படை நோக்கங்களுடன் தொடர்புடைய துறைகளை மேம்படுத்தல் மற்றும் இதர சேவைகளை உருவாக்குவதன் மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டுவதற்கான வணிக மாதிரிகளை உருவாக்குவது பற்றி இந்தக் குழு ஆராயும்.
இந்த உபகுழுவின் உறுப்பினர்களாகக் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்ஹ (தவிசாளர்), ரவீந்திர பண்டார மற்றும் தனுஷ்க ரங்கனாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து, சுற்றாடல், வர்த்தகம் மற்றும் மனித நேய எண்ணக்கருக்களின் ஊடாக போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பாராளுமன்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் மூன்று உப குழுக்கள்

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம்.

தெட்சணகைலாசம் என்னும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் பூலோக மகாசக்தி, 18 சக்தி பீடங்களில் முதன்மையானதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமாகிய அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் ஆதீனகர்த்தா வேதாகம மாமணி பிரம்மஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் இன்று (01) காலை 8.00 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்பாளின் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற தொடங்கினார்கள். ஆண்கள் அங்கப்பிரதட்ஷனையும் பெண்கள் அடிஅழித்தல் நிகழ்வும் நடைபெற்றது.

கற்பூரச்சட்டி எடுத்தல், அடிஅழித்தல், அங்கப்பிரதட்ஷணம் செய்யும் விரத அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை கோபுர வாசலில் இருந்து ஆரம்பித்து கோபுர வாசலிலேயே நிறைவு செய்வதை காணக்கூடியதாக அமைந்தது.

மேலும் விசேட பூஜை நடைபெற்று அம்பிகையானவள் வெளி வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு காட்சியளித்தார். பின்பு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு பூஜை இனிதே நிறைவு பெற்றது. அம்பிகை அடியார்களுக்கு மகேஸ்வர பூஜை என்று அழைக்கப்படும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

எதிர்வரும் வியாழக்கிழமை (10) காலை 8.00 மணிக்கு இரதோற்ஸவமும், வெள்ளிக்கிழமை (11) தீர்த்தோற்ஸவமும், அன்று இரவு துவஜ அவரோஹணம் என்னும் கொடியிறக்கமும் இடம்பெறும்.

காராம்பசு வாகனம், மகர வாகனம், சர்ப்ப வாகனம், அன்ன வாகனம்,மஞ்சத்தில் பவனி வருதல், கைலாச வாகனம்,புராதன சிம்ம வாகனம், குதிரை வாகனம், சப்பரத் திருவிழா, இரதோற்சவம், தீர்த்தோற்சவம் என 11 நாட்களைக் கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உற்சவங்கள் நடைபெறும். இறுதியாக பூங்காவனத்துடன் திருவிழா இனிதே நிறைவடையும்.

மகோற்சவ காலங்களில் விசேட நாதஸ்வர தவில் கச்சேரிகளுடன் திருவிழா சிறப்புற நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அம்பிகையின் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கொடியேற்றம்.

மியன்மார் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்

மார்ச் 28 அன்று மியன்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கவும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் மியன்மார் அரசுக்கு பிராந்திய அளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.

மியன்மார் மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவது குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைகளில் திருத்தம்

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்திற்குள் உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வலதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள்

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டை அடையாளமிட்டுக்கொள்வதற்கு உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வலதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வலிமையிழப்பொன்றிற்கு உட்பட்ட வாக்காளரொருவருக்கு வாக்களிப்பு நிலையத்திற்குள் உதவியாளர் ஒருவரை உடனழைத்துச் செல்வலதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள்

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்

உலக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தலைப்பில் சர்வதேச நிபுணத்துவ மாநாட்டின் உயர் மட்டப் பிரிவில் பங்கேற்பதற்காக இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்ஸ் தலைநகர் பெரிசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் பிரான்சிற்கு விஜயம்

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பில் தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு கொழும்பில் நடைபெற்றது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பில் தேசிய நோய் எதிர்ப்புச் சக்தி மாநாடு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]