2026 ஜூன் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

2026 ஜூன் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
"கொழும்புக்கும் பொசன்" தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்
பிரதமரின் பொசன் தின வாழ்த்துச் செய்தி
இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த தேசமாக மாற்றி
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூன் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் வடக்கு மாகாண மக்களுக்கு மேம்பட்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பான செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் இன்று காலை (28) நெடுந்தீவு மற்றும் அனலை தீவுகளுக்கு ஒரு விசேட விஜயத்தை மேற்கொண்டார்.
கலுபோவில மருத்துவமனையின் புதிய கேத் லேப் (Cath – Lab) பிரிவு மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் எதிர்வரும் 30ஆம் தேதி அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும்.
நாட்டின் சுகாதாரம் சார்ந்த சேவைகளை நெறிப்படுத்துவதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட புதிய திட்டங்களின் கீழ், கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் (களுபோவில) புதிதாக நிறுவப்பட்ட, பல அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய இதய ஆய்வகம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் 30ஆம் திகதி உத்தியோக பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள சிரேஷ்ட பிரஜைகள் எவராவது இருப்பார்களாயின், தயவுசெய்து கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரை முடிந்தவரை விரைவில் சந்திக்கவும்.
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்கு கூட்டு முயற்சியும் பகிரப்பட்ட அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது.
அறிவு, திறமை மற்றும் ஆற்றல் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் உயர்கல்வியின் முன்னேற்றமும் தொடர்ச்சியான வளர்ச்சியும் மிக முக்கியமான பொறுப்புகளாகும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
மக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதி – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
*தெல்லிப்பளை வைத்தியசாலை தொடர்பாக அதன் நிர்வாகம், வைத்தியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ*
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகளின் மட்டம் உயர்வாகக் காணப்படும்போது கரையை அண்டிய பகுதிகளில் அலைகளின் எழுச்சிக்கான சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
2026 ஜூன் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன இதய ஆய்வகம் (Cath Lab ), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் பிரசன்னத்தில் இன்று (27) திறந்து வைக்கப்பட்டது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]