இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு அண்மையில் (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது.
தேசிய மாணவர் படையணியின் (NCC) புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் பிரிகேடியர் ரஜித்த பிரேமதிலக்க, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (மார்ச் 24) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) 9வது பணிப்பாளர் நாயகமாக கொமடோர் ஜானக்க குணசீல நியமிக்கப்பட்டுள்ளார்.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
மார்ச் 21 அன்று அனுசரிக்கப்பட்ட சர்வதேச காடுகள் தினத்துடன் இணைந்து, “வனங்கள் மற்றும் உணவு" என்ற கருப்பொருளை மையமாக வைத்து, அனுராதபுர மாவட்ட வனப் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தின் ஏற்பாட்டில், மத்திய நுவரகம்பாலை பிரதேச செயலகம், மத்திய கலாச்சார நிதியம், தொழிற்பயிற்சி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இணைந்து அனுராதபுர ஜேதவன புனித பூமி மற்றும் ருவன்வெலிசாய புனித பூமியை மையமாக வைத்து சர்வதேச காடுகள் தின நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
- பொத்துஹெர - ரம்புக்கன நெடுஞ்சாலையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை
- உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் அபிவிருத்தி திட்டம்
ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இன்று (2025 மார்ச் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இராணுவ புலனாய்வு படையணியின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 மார்ச் 20 ஆம் திகதி கரந்தெனிய படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பதவியேற்றார்.