போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் அண்மையில் செயல்படுத்தப்பட்ட நிலையான திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை கொடுப்பனவுகளை அனுமதிக்க ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருணாகலை பிரிவு ஆகியவற்றின் வெளியேறும் வாயில்களில் இன்று (21) வங்கி அட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
35 இடைமாறல்கள் மற்றும் 119 வெளியேறும் வாயில்களில் இன்று முதல் இந்த சேவை வசதிகளை வழங்க தயாராக இருப்பதுடன், அதிகாரிகள் குழுவிற்கும் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், இதனால் வசதியும் நேரமும் மிச்சமாகும், இது மக்களின் வாழ்க்கைக்கு மிகுந்த ஆறுதலை அளிக்கும்.