நாளாந்தம் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை 

நாளாந்தம் விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை 
  • :

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஒரு நாளைக்கு வெளியிடப்பட்டு வந்த1200 அளவிலான கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை 4000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

 

 

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குடிவரவு ககழ்வு திணைக்கலாம் 24 மணி நேர சேவையை ஆரம்பித்ததாகவும் விமான கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் ஒருநாள் சேவையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

 

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

 

 

 

அவசரமாக கடவுச்சீட்டு அவசியமாயின் ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

 புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் 3000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகவும் புதிய கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு 356,714 விண்ணப்பங்கள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

 

 

விமானப் பயணக் கடவுச் சீட்டு பற்றாக்குறை காரணமாக கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து இக்கடவுச் சீட்டுகளை விநியோகிப்பதில் தாமதம் காரணமான பற்றாக்குறையினால் 349,483 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அதில் 303,483 விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்

விபரித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]