இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
All Stories
ஊடக வெளியீடு 105
இலங்கையை வந்தடைந்த சீன "Peace Ark" மருத்துவமனை கப்பலை பிரதமர் பார்வையிட்டார்.
மக்களின் ஆரோக்கியத்தை அணுகுவதற்கான உரிமையை அடிப்படை மனித உரிமையாக புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரகடனப்படுத்தப்படும் என்றும், அது மீறப்படும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தின் உதவியை நாட முடியும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கையின் ரோமானிய தூதுவர், Steluta Arhire அவர்கள், தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு, கடந்த டிசம்பர் 23 அன்று பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இலங்கை மற்றும் ரோமானியா இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக பிரதமர் தூதுவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தூதுவரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது என பிரதமர் இங்கு உறுதிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் பிரதம செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக பிரதம செயலாளர் சாகரிக்கா போகஹவத்த மற்றும் வெளியுறவு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா இயக்குனர் ஜெனரல் ஷோபிணி குணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் நேற்று (22) ஆரம்பமானது.
நத்தார் கெரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு இலங்கை இராணுவத்தின் பாடல் குழு மற்றும் இசைக்குழுவினரால் நேற்றைய தினம் நத்தார் கெரோல் கச்சேரி நிகழ்த்தப்பட்டது.
இந்த கிறிஸ்மஸ் கெரோல் இசை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி வரை தினமும் இரவு 7.00 மணி முதல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம்(23ஆம் திகதி) இலங்கை விமானப்படையின் பாடல் மற்றும் இசைக்குழு இணைந்து கிறிஸ்துமஸ் கெரோல் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.
நேற்றைய கெரோல் இசை நிகழ்ச்சியை நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் நஜித் இந்திக்க, லக்மாலி ஹேமச்சந்திர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது.
நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது.
இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு,பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர்.
பிரதான புகையிரத பாதையின் கம்பஹா - ஜாஎல பாதை வழியாக காணப்படுகின்ற புகையிரத குறுக்கு வீதியில் புணரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால், 2024.12.28ஆம் திகதி முதல் 2024.12.30ஆம் திகதி வரை அப்பாதை வழியாக வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நாட்டின் இளைஞர்களுடன் இணைந்து, ஒரு புதிய ஊடக வடிவத்திற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் - இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேக
2024 ஆம் ஆண்டுக்கான, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025 ஜனவரி மாதம் 02ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன், அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை 2025 ஜனவரி மாதம் 24ஆம் திகதியன்று நிறைவடையும் என்றும் அவ்வரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உங்கள் வலுவான அர்ப்பணிப்பு நாட்டிற்குத் தேவை -பாதுகாப்பு பிரதி அமைச்சர்
தியத்தலாவை இலங்கை இராணுவ கலாசாலையில் (SLMA) புதிதாக அதிகாரம் பெற்ற 222 அதிகாரிகளை தேசத்திற்காக அர்ப்பணிக்கும் நிகழ்வு கடந்த 11ம் திகதி பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது.
கென்யா, உகாண்டா, காம்பியா மற்றும் செம்பியாவைச் சேர்ந்த 10 வெளிநாட்டு கெடெட் அதிகாரிகளும் இதில் உள்ளடங்குவர். அத்துடன், இந்திய தேசிய பாதுகாப்பு கலாசாலை மற்றும் அதிகாரிகள் பயிற்சி கலாசாலை அத்துடன் பங்களாதேஷ் இராணுவ கலாசாலை மற்றும் பாகிஸ்தான் இராணுவ கலாசாலை போன்ற புகழ்பெற்ற இராணுவ பயிட்சி கலாசாலைகளில் வெளிநாட்டு பயிற்சியை முடித்த பதின்மூன்று இலங்கை கெடெட் அதிகாரிகளுக்கும் இந்நிகழ்வின் போது அதிகாரம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் புதிய அதிகாரிகளைப் பாராட்டிப் பேசுகையில், “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பணியில் உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியம்" என வலியுறுத்தினார்.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ். பாதுகாப்பு படை தலைமையகத்தின் 32 வது தளபதியாக மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 2024 டிசம்பர் 20 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.