கல்வி அமைச்சின் இந்து சமய ஆலோசனை சபைக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

கல்வி அமைச்சின் இந்து சமய ஆலோசனை சபைக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
  • :

கல்வி அமைச்சின் மத ஆலோசனை சபை நியமனத் திட்டத்தின் கீழ், இந்து சமய கல்வி ஆலோசனை சபைக்கான புதிய நியமனக் கடிதங்கள் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று (28) கல்வி அமைச்சில் வழங்கப்பட்டன.

நியமனத்தைத் தொடர்ந்து, இந்து சமய கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து அமைச்சருக்கும் ஆலோசனை சபைக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சமமான மரியாதை மற்றும் ஏற்றுக்கொள்ளலை ஏற்படுத்துவதில் இந்த ஆலோசனை சபைகளுக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Articles