All Stories

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். 

முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம்  குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். 

அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். 

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். 

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2024-12-20

ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில்  அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது  200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார்.

சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். 

அரச சேவையில் இருக்கின்ற கதிரை  தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார். 

உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி 

வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது ​1500 அதிகாரிகளை ​இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார். 

அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன்  உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் 'Clean Srilanka' திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக, வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ்  'Clean Srilanka' ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2024.12.20

 

அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளது

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். - பிரதமர்

தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சரியான முறைமைகளை உருவாக்குங்கள்

பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளி இல்லாமலாக்கப்பட வேண்டும்

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். - பிரதமர்

சந்தைக்கு அரிசி கிடைத்த வண்ணமே உள்ளது... அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசியை தற்போது பகிர்ந்தளிக்கும்  நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சந்தைக்கு அரிசி கிடைத்த வண்ணமே உள்ளது... அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்

சகல துறைகளிலும் பணியாற்றும் வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக திருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது தொடர்பாக அரசாங்கத்தின் தீர்மானம்

2024 ஆம் ஆண்டின் மூளை ஆரோக்கிய வாரத்தின் ஆதரவு தினம்’ KDU இல் நடைபெற்றது

மூளை சுகாதார வாரம் 2024 இன் ‘ஆதரவு தினம்’ நேற்று (டிசம்பர் 19) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) நடைபெற்றது.

2024 ஆம் ஆண்டின் மூளை ஆரோக்கிய வாரத்தின் ஆதரவு தினம்’ KDU இல் நடைபெற்றது

KDU உபவேந்தர் பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) உபவேந்தர் (VC) ரியர் அட்மிரல் தம்மிக்க குமார நேற்று (டிசம்பர் 19) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு)கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

KDU உபவேந்தர் பிரதி பாதுகாப்பு அமைச்சரை சந்தித்தார்

இன்றைய வானிலை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையை விட்டு விலகி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இன்றைய வானிலை

அரசியல் தேவைகளுக்காக ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

அரசியல் தேவைகளுக்காக அல்லது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைக்கும் ஒப்பந்தங்களுக்கு புதிய அரசாங்கம் உடன்படப்போவதில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசியல் தேவைகளுக்காக ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்படவில்லை - அமைச்சர் விஜித ஹேரத்

1500 அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் 02 வாரகால பயிற்சி

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கையின் 1500 அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வார பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

1500 அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் 02 வாரகால பயிற்சி

சிவனொளிபாதமலை யாத்திரை மத சடங்குகளுடன் ஆரம்பம்

டிசம்பர் முதல் மே வரையிலான வருடாந்த புனித பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், உடுவப் பெளர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பமானது. இரத்தினபுரி, கல்பொத்தவல சிவனொளிபாதமலை ரஜ மகா விஹாரையில் புனித தாது மற்றும் சுமன சமன் சிலை பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளுடன் இவ்வருட நிகழ்வு ஆரம்பமானது.

சிவனொளிபாதமலை யாத்திரை மத சடங்குகளுடன் ஆரம்பம்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி  நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை  முன்னறிவித்தல்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]