All Stories

ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

ரமழான் நோன்புப் பெருநாளை அனுஷ்டிப்பதற்காக விடுமுறை தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள 2025.03.31ம் திகதிக்கு மேலதிகமாக 2025.04.01ம் திகதியன்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்குப் பதில் நாள் பாடசாலை நடாத்தப்படவேண்டிய திகதி பின்னர் அறியத் தரப்படும் என்று
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது அறிக்கை பின்வருமாறுFB IMG 1743263526192

ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி

இந்த நாட்டில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு சாலை விபத்தில் ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர் இழக்கப்படுவதாகவும், அது இப்போது கட்டுப்படுத்த முடியாத சவாலாக மாறிவிட்டது என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி

அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகள்

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகள்

ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு

தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின்  தேசிய உப்புத் தொழிற்சாலை இன்று (29) முதல் மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்டுள்ளது

ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்காக திறப்பு

கப்ருகட சவியக் - வெடி பலதாவக் ( தென்னைக்கு பலம் - அதிக விளைச்சல்) திட்டத்தின் கீழ் மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் தென்னை உற்பத்திச் சகையினால் நடைமுறைப்படுத்தப்படும் கப்ருகட சவியக் - வெடி பலதாவக் ( தென்னைக்கு பலம் - அதிக விளைச்சல்) திட்டத்தின் கீழ் தென்னை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் நிகழ்வு நாளை (30) ஆரம்பமாகும்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் ரஷ்யா அரசாங்கம், யூரல் கலி நிறுவனம் மற்றும் இலங்கை அரசு ஆகியன ஒன்றிணைந்து இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. 
 
ரஷ்யாவின் அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற 27,500 மெற்றிக் தொன் எம் ஓ பி உரம் மற்றும் ஏப்பாவெல ரொக் பொஸ்பேட் , யூரியா கலந்த தென்னை உற்பத்திக்கான விசேட ஏஎம்பி தென்னை உரம் 56,700 மெற்றிக் தொன்னை தயாரிக்கும் அரச உரக் கம்பனி தற்போது இதற்காக செயற்பட்டு வருகிறது.
 
இந்த உரத்தை மானிய விலையில் வழங்குதல் மற்றும் விநியோகித்தல் என்பவற்றுக்காக அவசியமான நடவடிக்கைகளை தென்னை உற்பத்திச் சபை மற்றும் அரச உரக் கம்பனி ஆகியன மேற்கொண்டு வருகின்றன. 
 
சந்தையில் 9000 ரூபாய்க்கு காணப்படும் 50 கிலோ உரப் பொதி ஒன்றை 4,000 ரூபாய் மானிய விலையில் வழங்கும் செயற்பாடு இதற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். 
 
அதன்படி இம்மாதம் 30ஆம் திகதி வெள்ளவாய பிரதேச செயலாளர் பிரிவில் தென்னை உற்பத்திச் சபையின் ஹந்தபானகல தென்னை நாற்று மேடையில் இடம் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 
 
இங்கு ஐந்து ஏக்கருக்கு குறைவாக கால் ஏக்கரை விட அதிக தென்னை உற்பத்தி நிலத்தில் 350000 ஏக்கர் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் மூலம் அதிக தென்னை உற்பத்தியாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
 
5600 மில்லியன் ரூபாய் முதலீடு ஒன்றின் கீழ் இந்த தென்னை உர மானிய திட்டம் செயற்படுத்தப்படுவதுடன், இந்த தென்னை உரத்தை  பயன்படுத்தும் போது நாட்டின் தென்னை தேங்காய்க்கான தேவையைப் பூரணப்படுத்தும் நோக்கம் காணப்படுவதாகவும், இந்த உர விநியோகத்தினால் ஒன்றுரை வருடங்களுக்குப் பிறகு அறுவடை அதிகரிக்கும் எனும் நோக்கத்தை அடைவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
 
தென்னை உற்பத்தியாளர்கள் இந்த மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு தென்னை உற்பத்திச் சபையின் ஊடாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன் அதற்காக அந்த விண்ணப்பப் பத்திரத்தை தென்னை உற்பத்திச் சபையின் உத்தியோகபூர்வ https://cocnutsrilanka.lk/ இணையத் தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
கப்ருகட சவியக் - வெடி பலதாவக் ( தென்னைக்கு பலம் - அதிக விளைச்சல்) திட்டத்தின் கீழ் மானிய விலையில் உரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை 

தேசிய உப்புக் கம்பனியுடன் இணைந்த ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்கு

தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின்  தேசிய உப்புத் தொழிற்சாலையை இன்று (29) முதல் மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார்.
 
"ரஜ லுணு" எனும் பெயரில் சமையல் உப்பு வர்த்தக பேருடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன் அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும் சாதாரண விலையில் சமையல் உப்பு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
தொழிற்சாலை ஊடாக இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
 
தேசிய உப்புக் கம்பனியுடன் இணைந்த ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்கு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலக வங்கியால் செயல்படுத்தப்படக்கூடிய சாத்தியமான திட்டப் பகுதிகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

சுற்றுலா, விவசாயம், மீன்பிடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மேம்படுத்தல் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு புத்தாண்டு காலத்தில் 50% தள்ளுபடி விலையில் உணவுப்பொதி

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தள்ளுபடி விலையில் உணவுப் பொதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

அஸ்வெசும காத்திருப்புப் பட்டியலில் உள்ள 08 இலட்சம் குடும்பங்களுக்கு புத்தாண்டு காலத்தில் 50% தள்ளுபடி விலையில் உணவுப்பொதி

ஜனாதிபதிக்கும் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்  கண்டி-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதிக்கும் போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்  	கண்டி-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-கடவத்தை பகுதியின் நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கத் திட்டம்

2025 மார்ச் 29 ஆம்திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

2025 மார்ச் 29 ஆம்திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

பாடசாலை எழுத்துக்கருவிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபா உறுதிச் சீட்டுக்குரிய திகதி 2025.04.30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

4b8b907f 4756 45f5 b78e 91de06d97a69

பாடசாலை எழுத்துக்கருவிகளுக்காக வழங்கப்படும் வவுச்சர்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

இந்திய பிரதமரின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் தொடர்பான அறிவித்தல்

இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஏப்ரல் 4ஆம்  திகதி முதல் திகதி வரை இலங்கையில் உத்தியோக சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவித்தல் ஒன்றை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு விடுத்துள்ளது. 
இந்திய பிரதமரின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் தொடர்பான அறிவித்தல்

மூடப்படவிருந்த மில்கோ நிறுவனம் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு முடிந்தது  மில்கோ நிறுவனத்தின் தலைவர் 

அரசாங்கத்தின் பிரதான பால் உற்பத்தி நிறுவனமான மில்கோ கடந்த ஐந்து மாதங்களில் மிக வேகமாக முன்னேற்றமடைந்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ   கோட்டாபய தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே தலைவர் இதனை குறிப்பிட்டார். 
 
தற்போது மில்கோ நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு பரவலாக்கப்பட்டுள்ளதாகவும், மில்கோ நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹைலேண்ட் உற்பத்திகளை மக்களுக்கு அசௌகரியம் இன்றி சந்தையில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். 
 
தற்போது நிறுவனத்தின் 50 வீதமான கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் தலைவர் குறிப்பிட்டார். 
 
 பால் பண்ணையாளர்களுக்காக செலுத்துவதற்கு காணப்பட்ட 500 மில்லியன் ரூபாய் வரையிலான மீதித் தொகை விரைவாக செலுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த பற்று நிதி முழுமையாக செலுத்தப்பட்டு முடிவடைந்துள்ளதாகவும், ஏனைய விநியோகத்தர்களுக்கான 790 மில்லியன் ரூபாய் அளவு பற்று முதலும் தற்போது செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அது மாத்திரமன்றி அங்கு காணப்பட்ட வங்கி மேலதிகப் பற்று மீதி 1800 மில்லியன் ரூபா தற்போது 1200 மில்லியன் ரூபா வரை குறைப்பதற்கு முடிந்ததாகவும் சுட்டிக்காட்டினார். 
 
தற்போது ஹைலேண்ட் உற்பத்தி நாமத்தை (பிராண்ட் ) மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு முடிந்துள்ளதாகவும், அண்மையில் இடம்பெற்ற விருது விழாவில் சிறந்த பால் உற்பத்திக்கான விருது ஹைலேண்ட் பாலுக்காக வெற்றி பெறுவதற்கும்  சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் குறிப்பிட்டார். 
 
கடந்த காலங்களில் தடைப்பட்டிருந்த விநியோக வலையமைப்பு தற்போது ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் நாடு முழுவதும் பிரதான நகரங்களை உள்ளடக்கியவாறு மில்கோ நிறுவனத்தின் 500 விற்பனை நிலையங்களை  ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் விபரித்தார்.
 
தற்போது அந்த விற்பனை நிலையங்களில் சிலவற்றை ஆரம்பித்துள்ளதுடன், எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் அந்த இலக்கை அடைவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
மூடப்படவிருந்த மில்கோ நிறுவனம் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு முடிந்தது  மில்கோ நிறுவனத்தின் தலைவர் 
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]