ஊவா மாகாண, சிங்கள மற்றும் தமிழ் அரச இலக்கிய விழா கடந்த 23 ஆம் திகதி பதுளை மாவட்ட நூலக கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் ஏற்பாட்டுடன் இடம்பெற்ற இந்த இலக்கிய விழாவில், சிங்கள மற்றும் தமிழ் படைப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட 3000 படைப்புக்களில், தெரிவு செய்யப்பட்ட 334 படைப்புக்களை கௌரவித்து விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஊவா மாகாண நூலக சேவைகள் சபையின் தலைவர் நிஸ்ஸங்க விஜேமான உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.