வவுனியாவில் பெரியகட்டு கிராமிய நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிப்பு

வவுனியாவில் பெரியகட்டு கிராமிய நீர் வழங்கல் திட்டம் மக்களிடம் கையளிப்பு
  • :

வவுனியா மாவட்டத்தின் வெங்கலசெட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில் நிர்மாணிக்கப்பட்ட பெரியகட்டு சமூக நீர் வழங்கல் திட்டம் அண்மையில் (17 ஆம் திகதி) மக்களிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் 31 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் பெரியகட்டு கிராமத்தின் 185 குடும்பங்களுக்கு புதிய நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கணேசபுரம் உள்ளிட்ட அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படவுள்ளதாக தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related Articles