புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு
  • :

இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (2026 ஜூலை 17) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

 

 

பொலிஸ் தலைமையகத்திற்கு வந்தடைந்த கடற்படைத் தளபதியை, பொலிஸ் மா அதிபர்.ஜெனரல் பிரியந்த வீரசூரிய, புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

 

 

 

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல், போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், இலங்கை பொலிஸ் துறையின் தேவைக்கேற்ப கடற்படையின் ஆதரவை வழங்குவதற்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

 

 

 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ தனது புதிய பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், இலங்கை பொலிஸ் மா அதிபரைச் சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், இந்த விசேட சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன

Related Articles