இலவச வாகன டியூன்அப் முகாம் மே மாதம் 31 ஆம் திகதி கேகாலையில் - மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்

இலவச வாகன டியூன்அப் முகாம் மே மாதம் 31 ஆம் திகதி கேகாலையில் - மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்
  • :

காற்று மாசுறுதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளும் தினம், 2025 மே மாதம் 31ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜூன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சுற்றுச் சூழல் தினத்துடன் இணைந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.


இந்த நாளுடன் இணைந்து, மே மாதம் 31 ஆம் திகதி காலை 10 மணி முதல் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை இலவசமாக டியூன்அப் செய்து கொடுக்கப்படவுள்ளதுடன், எரிபொருள் திறன் மற்றும் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பனவும் இடம்பெறும்.

இதன் ஆரம்ப நிகழ்வு, சுற்றாடல் அமைச்சரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி 'அழகான நாடு, சுத்தமான சுவாசம்' என்ற கருப்பொருளின் கீழ் 5 வது முறையாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles