கல்வி நடவடிக்கைகளுக்கான உதவி மற்றும் மருத்துவ போக்குவரத்துக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு

கல்வி நடவடிக்கைகளுக்கான உதவி மற்றும் மருத்துவ போக்குவரத்துக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நிகழ்வு
  • :

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கல்விக்கான உதவி வழங்கல் நிகழ்வும், மருத்துவ போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி தலைமையில் நேற்று (29) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மத்திய சமூக சேவை திணைக்களத்தினால் அங்கவீனமுற்ற நபர்களைக் கொண்ட குடும்பத்துக்கான கல்விக்கான உதவித் தொகை மற்றும் மருத்துவத்திற்கான போக்குவரத்துக் கொடுப்பனவு என்பன பிரதேச செயலாளரின் தலைமையில் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், வெளிக்கள பிரிவுக்கான பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தா் உட்பட பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Related Articles