நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
2025 ஜூன் மாதம் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
2025 ஜூன் மாதம் 01 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அல்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேலைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீச கூடும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்