முறையான கிராமிய அபிவிருத்தியொன்றை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கை அடிப்படையாகக் கொண்டு, அனுராதபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கான நிகழ்வொன்று அண்மையில் இடம்டபெற்றது.
இந்நிகழ்வானது, அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரியவின் வழிகாட்டலில், கிழக்கு மாகாணத்தின் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீரிக்குளம் கிராமத்தில் இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், கிராமிய அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய, 2025-2029 கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.