எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு முற்பகல் 9.30 மணிக்கும், பிற்பகல் 2.30 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
வாக்கெண்ணும் நிலையத்தின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து இதன்போது மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ்.கே.டி நிரஞ்சன் அவர்களால் தெளிவூட்டப்பட்டன.
இம்முறை, உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் 129 நிலையங்களில் வாக்கெண்ணல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.