2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுங்கத் தணைக்களத்தின் 120 வருடகால வரலாற்றில் 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியது இதுவே முதல் தடைவயாகும் என்றும் திணைனக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மதுபான உற்பத்திக்கான வரியூடாகவும், புகையிலை வரி சட்டத்தின் கீழ் பெறப்படும் வரியினூடாகவுமே இந்த வருமானமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் சுங்கத் திணைக்களம் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு;ள்ளது