திட்டமிடல் இன்றி, அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் பற்றாக்குறை மற்றும் தேவைகளுக்குப் பொருத்தமில்லாத பௌதீக வளங்களை வழங்குவதன் அடிப்படையில் வைத்தியசாலைகள்மற்றும் அமைச்சுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன் முறைப்பாடுகளும் முன்வைக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விசேடமாக முறையான திட்டமிடல் இன்றி அரசாங்க வைத்தியசாலைகளுக்கு கட்டடம் மற்றும் வைத்திய உபகரணங்கள் அவசியமற்ற விதத்தில் வழங்கப்படுகின்றமை தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும், அதனிடையே அவற்றின் பயன்பாட்டிற்கு ஊழியர்களை வழங்காதிருப்பதாகவும் அமைச்சுக்கு பாரிய குற்றச்சாட்டப்படு முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக தனது அமைச்சின் கீழ் வரும் சீதுவ விஜயகுமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்காக அண்மையில் பைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியுடன் வைத்தியசாலையின் வளாகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெளிவு படுத்தினார்.
மறைந்த கலைஞர் விஜயகுமாரதுங்க நினைவாக இவ் வைத்தியசாலை அப்போதை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 1999 ஒக்டோபர் 9ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்படுகிறார்.
சுகாதார அமைச்சின் கீழ் நிர்வாகிக்கப்படும் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் வைத்திய பிரிவு, ஆரம்ப சத்திர சிகிச்சை பிரிவு, ஆய்வு கூட சேவை, அறுவை சிகிச்சை பிரிவு, எக்ஸ்ட்ரே மற்றும் இசிஜி பிரிவுகள் உட்பட பல பிரிவுகள் தற்போதைய செயற்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சர் ஆராய்ந்தார்.
அவ்வாறே 2020ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை வைத்தியசாலையின் செயற்திறன், அரசாங்கத்தின் பிரதான வரவு செலவினங்கள், நன்கொடைகள் 2025ஆம் ஆண்டிற்கான மருத்துவ உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கட்டடங்கள் சம்பந்தப்பட்ட சகல மதிப்பிடப்பட்ட வரவு செலவு திட்டம் அனைத்தும் அமைச்சரினால் மிகவும் அவதானமாக ஆராயப்பட்டது.
வைத்தியசாலையினால் குறைந்த வருமானம் பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்த சிறுநீரக நோயாளர்கள், கண் வெண்புருவத்திலிருந்து தற்போது வழங்கப்படும் சிகிச்சை சேவைகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் மேலும் முறையானதாக எதிர்காலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு அவசியமான கருத்துக்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டன.
கண் வில்லைகளைப் பெறும் திட்டம் வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான வைத்திய உபகரணங்களை பலவற்றை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பராமரிப்பு, திறைசேரி உடன் தொடர்பான வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெறும் நன்கொடை வரிகளில் இருந்து விலக்களிப்பு போன்ற வைத்தியசாலை முகாமைத்துவத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வைத்தியசாலையில் தற்போது தொடர்ந்து செயற்பாட்டில் இல்லாத உபரணங்களை மீளமைப்பதற்கும் வைத்தியசாலை ஊடாக வழங்கப்படும் சிகிச்சை சேவைகளை முன்னேற்றுவதற்கு ஆக சுகாதார அமைச்சின் அது கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்த அமைச்சர்; விஜயகுமாரதுங்க வைத்தியசாலை ஊடாக மேற்கொள்ளப்படும் கண் தொடர்பான சிகிச்சை மற்றும் சத்திர சிகிச்சை சேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதன் போது குறுங்கால அபிவிருத்திக்கான யோசனைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் வைத்தியசாலை ஊடாக வழங்கப்படும் சேவைகளை பரவலாக்கல் மற்றும் வலுப்படுத்துவதற்காக அமைச்சு மட்டத்திலான சரளமான திட்டம் ஒன்றை தயாரிப்பதாகவும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, விஜயகுமாரதுங்க வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், செயற்பாட்டு முகாமையாளர் குழுவின் பிரதிநிதிகள், அதிகாரி நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.