இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு

இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு
  • :

எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21.04.2025) மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.

இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன் கடந்த தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சுமூகமாகவும் வினைத்திறனாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், கடந்த தேர்தலில் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் மற்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]