இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது

இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது
  • :

இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும் எனும் தொனிப்பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது, அதற்காகவே குறித்த உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வேண்டு கோளுக்கு அமைவாக 750  உலர் உணவுப் பொதிகள் இன்று மாவட்ட செயலத்திற்கு அனுப்பி வைத்துள்னர்.

பெறுமதியான இவ் உலர் உணவு பொதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், கணக்காளர் எம்.வினோத் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]