கடந்த வருடத்தில் இருந்து தற்போது வரை நுகர்வு பொருட்களின் விலை 19%ஆல் குறைவடைந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
சதோச வலையமைப்பில் மாத்திரம் கடந்த நான்கு மாதங்களில் 25 வகையான பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். நேற்று (09) பாராளுமன்றத்தில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளை மற்றும் விசேட வர்த்தகப் பொருள் வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை மற்றும் நலன்புரி பயன்களின் கீழ் அறிவித்த சிலவற்றின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்;
"ரணில் விக்கிரமசிங்க இந்த 100 நாட்களுக்குள் இருந்திருந்தால் எத்தனை தடவை வெளிநாட்டிற்கு சென்றிருப்பார்? நமது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் 2 தான். இந்த நூறு நாட்களுக்குள் இரண்டு ராஜதந்திர பயணங்கள் மாத்திரம் தான். இந்த நூறு நாட்களுக்குள் ஒரு பிரதமருக்கு அல்லது ஒரு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இருந்திருந்தால் தற்போது எத்தனை தடவை வெளிநாடுகளுக்கு சென்றிருப்பார். இங்கு அமைச்சர் ஒருவருக்கு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அல்லது பிரதி அமைச்சருக்கு இலஞ்ச ஊழல் தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. இந்த 49 நாட்களில் அற்புதங்களை நிகழ்த்த முடியாது என்று இந்த நாட்டின் மக்களுக்குத் தெரியும். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நாம் கிராமத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். ஆனால் ஒரு ரூபாய் கூட இலஞ்ச ஊழல் இடம்பெறவில்லை.
விசேட வர்த்தக பொருள் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட வெள்ளைப் பூண்டு ஊழல் சீனி ஊழல் போன்ற ஊழல்கள் காணப்பட்டன.
2024 ஜனவரியில் இருந்து இந்த ஜனவரி மாதம் வரை நுகர்வு பொருட்களின் விலை 19%ஆல் குறைவடைந்துள்ளது. சதோச வர்த்தக வலையமைப்பில் 25 வகையான பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. பாராளுமன்றத்திற்கு வந்து இன்னும் 49 நாட்கள் தான்.
சட்ட ஒழுங்கு காரணமாக கடந்த அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை அதே விதமாக கொண்டு செல்லக்கூடிய இருந்ததாகவும், எதிர்காலத்தில் இவற்றை திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சீமெந்துகளின் விலைகளும் குறைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெளிவு படுத்தினார்.