அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாத பயனாளர் கொடுப்பனவு இன்று (15) வைப்பிலிடப்படும்
அஸ்வெசும முதலாம் கட்டத்திற்கு தெரிவி செய்யப்பட்ட பயனாளர்களுக்கான ஒக்டோபர் மாத பயனாளர் கொடுப்பனவு இன்று (15) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, 1,415,016 (பதினாலு இலட்சத்து பதினைந்தாயிரத்து பதினாறு) பயனாளி குடும்பங்களுக்கு ரூ. 11,223,838,750.00 (பதினொரு பில்லியன் இருநூற்று இருபத்து மூன்று மில்லியன் எண்ணூற்று முப்பத்தெட்டாயிரத்து எழுநூற்று ஐம்பது) தொகையை அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.


