சகல பாடசாலைகளுக்காக அதிபர்கள் நியமிக்கப்படும் போது ஒரே ஒரு கொள்கை தான் பின்பற்றப்படுகிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்..
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே நேற்று (09) பாராளுமன்றத்தில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அண்மையில் அரசாங்கத்தினால் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனம் சிக்கலான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முறையான கட்டமைப்பொன்று இன்றி பதில் அதிபர்களை நியமித்து பல வருடங்கள் அது ஆசிரியர்களுக்கும் பாடசாலைகளுக்கும் நியாயமற்ற விதமாக பிரச்சினையான நிலைமைக்கு பாடசாலை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. தற்போது சரியான முறை ஒன்றுக்கு ஏற்ப காணப்படும் சுற்றறிக்கைக்கு அமைவாக செயற்பட்டு அது திருத்தப்பட்டு வருகின்றது. அதிபர் பதவியில் இருக்க வேண்டிய நபரிடம் காணப்படும் தகைமைகளுக்கு ஏற்ப நேர்முகப் பரீட்சை ஊடாக முறையான நடைமுறையில் சகல தேசிய பாடசாலைகளிலும் மற்றும் வெற்றிடம் காணப்படும் இடங்களுக்கும் அதிபர்கள் நியமிக்கப்படுவர். நாம் ஒவ்வொரு பாடசாலையையும் ஒவ்வொரு விதமாக கவனத்தில் கொள்வதில்லை. சகல பாடசாலைகளுக்கும் ஒரே ஒரு கொள்கையே பின்பற்றப்படுகிறது.
அந்தக் கொள்கையின் படி தான் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கும் அதிபர் நியமனம் இடம் பெற்றது.
கம்பஹா விக்கிரமாராய்ச்சி சுதேச வைத்திய வித்தியாலயத்தின் பிரச்சினைகள் பல காணப்படுவதாக பல்வேறு தரப்பினாலும் மேற்கொள்ளப்படுகின்ற எழுத்து மற்றும் வாய் மொழி மூல முறைப்பாடுகளின் படி பிரச்சினைகள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி இது தொடர்பாக முறையான மற்றும் பகுப்பாய்வு ரீதியாகக் கண்டறிவதற்காக தன்னால் துறை சார்ந்தவர்களின் குழு ஒன்றை நியமித்தேன் கல்வி உத்தியோகத்தர்கள் குலாம் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினேன். அங்கு ஆரம்பக் கலந்துரையாடலில் எம்மால் அடையாளம் காணப்பட்ட ஆரம்ப அடிப்படைப் பிரச்சினைகள் சில காணப்படுகின்றன.
விசேடமாக கம்பஹா விக்கிரமாராய்ச்சி சுதேச வைத்திய வித்தியாலயம் வித்தியாலயம் அவசியமான அடிப்படை வசதிகள் இன்றி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய பீடங்கள் மற்றும் புதிய பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவசியமான ஆளணி வளம் அல்லது உட்கட்டமைப்பு வசதிகள் சரியாக காணப்படவில்லை. அதுபோல் அடிப்படை நோக்கங்களுக்கு வெளிப்படையாக உள்நாட்டு மருத்துவ விஞ்ஞானத்திற்கு மேலதிக வசதிகள் இன்றி தொழில்நுட்பம், சமூக விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் போன்ற பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முறையான குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெளிவு படுத்தினார்.