அரசாங்க தகவல் திணைக்களத்தின் முகவரியிட்ட கடிதத்தைப் பயன்படுத்தி 'ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்' என்ற தலைப்பில் ஒரு போலியான செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
2025 ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை அரசாங்கம் இதுவரையிலும் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை. அத்துடன், இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் இது தொடர்பான அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படவில்லை என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.