சுற்றுலாத் துறையின் துரித அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக் கூட்டம், வௌிநாட்டலுவல்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நேற்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
இதன்போது, தற்போதைய சுற்றுலாத்துறையின் நிலைமையை வெற்றிகரமாக்குவதற்கு, எடுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்து உரிய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் போது விமான நிலையத்தில் ஏற்படுகின்ற நெறிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.


