2025 ஜனவரி 31 அன்று விநியோக மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய கடற்படையின் Multirole Light Frigate ரக 'KRI BUNG TOMO - 357' போர்க்கப்பலானது, அதன் விநியோகம் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் இன்று (2025 பெப்ரவரி 01) தீவை விட்டு வெளியேறுகிறது. மேலும் இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையின் பாரம்பரிய முறையில் கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.
மேலும், கப்பலின் தளபதி கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவுடன் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மற்றும் பணிப்பாளர் நாயகம் செயல்பாடுகள் , ரியர் அட்மிரல் புத்திக லியனககே அவர்களுடன் 2025 ஜனவரி 31 அன்று உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கடற்படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
மேலும், 'KRI BUNG TOMO - 357' என்ற கப்பல் தீவில் தங்கியிருந்த காலத்தில், கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கு பல பகுதிகளுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.