வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோணியார் வருடாந்திர திருவிழா கடந்த இரண்டு நாட்களாக (14 மற்றும் 15) கச்சத்தீவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இலங்கை மற்றும் இந்திய பாதிரியார்களின் பங்கேற்புடன் இலங்கை கடற்படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன்
இந்த திருவிழா ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஏராளமான இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, முப்படைகள் மற்றும் பொலிஸ் சிரிஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.