ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையின் போது கண்டிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி டி.சி.டி.இளங்கக்கோன் தெரிவித்தார். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2025 ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற முற்பாதுகாப்புத் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ், மத்திய மாகாணத்தின் காவல்துறை மா அதிபர் மற்றும் சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி, ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு நிலைமை மற்றும் கண்டி நகர போக்குவரத்து திட்டமிடல் குறித்து முப்படைகளின் உதவியுடன் தற்போது செயல்பட்டு வருவதாக அவர் விபரித்தார் .