மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான விவசாய அபிவிருத்திக்குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) இடம் பெற்றது.
மாவட்டத்தில் விவசாயத்துறையில் அபிவிருத்தி செய்வதற்காக 2025 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்வரும் ஆண்டில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத மேட்டு நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றில் உணவுத் தேவைக்கான உளுந்து, பயறு, கெளப்பி,
சோளம், நிலக்கடலை போன்ற பயிரினங்களைப் பயிரிட்டு , மாவட்டத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது..
இந் நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் ஜேகன்நாத், விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட மாவட்டப் பிரதிநிதி கிருஸ்ணகோபால் திலங்கநாதன் மற்றும் பிரதேச ரீதியான பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.


