நுவரெலியாவில் உள்ள சாந்திபுர ஈகிள்ஸ் பார்வை மையம் நேற்று (26) அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதையும் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு 'ஈகிள்ஸ்' பார்வையாளர் மையம் கட்டப்பட்டுள்ளது.
அந்த மத்திய நிலையத்திலிருந்து, நுவரெலியா நகரம், கிரகரி ஏரி, ஹக்கல, ஏழு கன்னி மலைத்தொடர் உள்ளிட்ட பல சிறப்பு இடங்களைக் காண சுற்றுலாப் பயணிகள் வாய்ப்பு பெறுவார்கள்.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான டிக்கெட்டுகள் QR முறை மூலம் மட்டுமே வழங்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது .