“களன மிதுரன் அசுரு கரண்ண (இளம் நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்)” எனும் தொனிப்பொருளில் நுவரெலியா தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதிக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நுவரெலியா தேசிய பௌத்த மத்திய நிலையம் மற்றும் நகர மண்டபத்தை கேந்திரப் படுத்தி இந்நிகழ்வை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இடம்பெறவுள்ள இத்தேசிய வெசாக் நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு சகலரினதும் ஒத்துழைப்பு அவசியம் என மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்தார்.
இத் தேசிய வெசாக் நிகழ்வு நடாத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்ட சகல உத்தியோகத்தர்களையும் தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (07) நுவரெலியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.