புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரியான பிரிகேடியர் ஏ.கே.டி. அதிகாரி, நேற்று (ஏப்ரல் 09) சுப நேரத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தற்போதைய நியமனத்திற்கு முன்னர், பிரிகேடியர் அதிகாரி, இலங்கை சமிக்ஞைப் படையணியின் 2வது சமிக்ஞைப் படையணியின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், அவர் இலங்கை இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.