"Clean Sri Lanka" திட்டத்தின் கீழ், லன்சிகம கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
கடற்கரையைச் சுற்றி வீசப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட திண்மக் கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள புற்களை அகற்றும் பணியும் இதில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் நாத்தாண்டியா ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கயான் ஜானக மற்றும் நாத்தாண்டியா பிரதேச செயலக அதிகாரிகள் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.