சம்மாந்துறை வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற இலவச கண் சத்திர சிகிச்சை முகாமினை பார்வையிட்ட சவூதி தூதுவர் 

சம்மாந்துறை வைத்தியசாலையில் இடம்பெறுகின்ற இலவச கண் சத்திர சிகிச்சை முகாமினை பார்வையிட்ட சவூதி தூதுவர் 
  • :

‘சவூதி நூர்’ தன்னார்வத் அமைப்பினால் சம்மாந்துறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கண் நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் சிறப்பு முகாமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானி இன்று (17) புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். 

இந்த முகாம் செப்டம்பர் 15 முதல் 28 வரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கண்புரை உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கான பரிசோதனைகள், சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய தேவையான மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

 

இலங்கை மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு துறைகளில் மனிதாபிமான உதவிகளை சவூதி அரேபியா வழங்கி வருகின்றது. 

 

இதற்கமைய முன்னெடுக்கப்படும் கண் நோய்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் சிறப்பு முகாம் மூலம் வருடாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கள் பார்வையை மீண்டும் பெறுவதோடு, வாழ்க்கைத் தரத்திலும் நேர்மறையான மாற்றத்தை அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles