மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பொதுமக்களுக்கு விடுக்கும் விசேட அறிவித்தல்!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பொதுமக்களுக்கு விடுக்கும் விசேட அறிவித்தல்!!
  • :

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பொது மக்களாகிய நீங்கள் உங்கள் அவதானங்களை தமது  வட்ஸ்அப் - 070 571 1151 (எப்போதும் சேவையில்..) இலக்கத்திற்கு அறியத்தரலாமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பொதுமக்களுக்கு விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட, வர்த்தக நிலையங்களில் உணவு கையாள்கையில், சுகாதாரமற்ற நடவடிக்கைகள் அவதானிக்கப்படின் மேற்படி இலக்கத்திற்கு வட்சப் (WhatsApp) குறும்செய்தி மூலம் அறிவிக்க முடியுமெனவும், புகைப்பட ஆதாரங்கள் மற்றும் (WahtsApps) குறும் செய்திகள் கவனத்தில் எடுக்கப்படுவதுடன், 

24 மணிநேரத்தினுள் முறைப்பாடுகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் துண்டுப் பிரசுரம் வாயிலாக தெரிவித்துள்ளது.

Related Articles