சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தக கண்காட்சி

சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தக கண்காட்சி
  • :

கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தக கண்காட்சி அண்மையில் (25) திருகோணமலை மக்கேசர் மைதானத்தில் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார, இன்னும் பல திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் வரவேற்று அழைத்து வரப்பட்டு கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது ஆளுநர் மற்றும் அதிகாரிகள் முயற்சியாளர்களின் உற்பத்திகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி கைத்தறி உற்பத்தி ஆடைகள் உடனான நவநாகரீக மேடை நிகழ்வு இடம்பெற்றது.

ஒவ்வொரு நாளும் முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 9 மணி வரை எதிர்வரும் (28)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles