உலக சிறுவர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது

உலக சிறுவர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது
  • :

உலக சிறுவர் தின நிகழ்வு நேற்று (01) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் கவிதை, பேச்சு, நாடகம் முதலான போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி மகிழ்வித்தார்.

இன்றைய இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட பத்து பாடசாலைகளின் சிறார்கள் கலந்துகொண்டனர். மேலும் குறித்த நிகழ்வானது AU Lanka நிறுவனத்தினதும் காருண்யம் சிறுவர் இல்லத்தினதும் அனுசரணையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், முன்பிள்ளைப் பருவ உத்தியோகத்தர், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏனைய உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles