குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்
  • :

குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந் திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று(01.10.2025) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் 09.08.2025 அன்று குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர் நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இது அமைந்திருந்து குறிப்பிடத்தக்கது.

Related Articles